Posts

Showing posts from October, 2012

Tamil Elocution தமிழ் பேச்சுப்போட்டி | இயற்கை உணவு ஆரோக்கியம் (Iyarkkai onavu aarokiyam)

"இயற்கையோடு வாழ பழகு மனிதா மனிதா இயற்கையை வெல்லுவது எளிதா எளிதா" என்ற பாடல் வரிகளை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  அவையோர் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம். இயற்கையோடு வாழப்பழகி இயற்கை உணவுகளை உண்டு நெடுநாள் வாழ நாம் அனைவரும் விரும்பும் ஒன்று. எனவே "இயற்கை உணவு ஆரோக்கியம்" எனும் தலைப்பில் சிறிது பேச விரும்புகிறேன். நாம் தினமும் மூன்று வேளை, நான்கு வேளை வயிறு புடைக்க நன்கு உண்ணுகின்றோம்.  அதில்  எத்தனை சதவீதம் உணவு இயற்கை உணவு என்று நம்புகிறீர்கள். இன்று எங்கு சென்றாலும், எந்த கடையைப் பார்த்தாலும் ஜிகுஜிகுவென்று பச்சை, மஞ்சள், சிவப்பு, நீளம் என்று பல கூடுகளில் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்கட் போன்றவை தொங்குவதை காண்கின்றோம். இந்த உணவு பொருட்களின் புழக்கதால் இயற்கையான உணவு பொருட்களை மக்கள், பொதுவாக சிறுகுழந்தைகள் அப்புறப்படுத்தி விடுகின்றனர்.  இதன் விளைவு தான் என்ன? நான்கு ஐந்து வயதான சிறுவர்கள் தேவையற்ற கொழுப்பு மற்றும் தாதுப்புக்கள் உடலில் தங்கி வயதில் கவிந்த உடல்வாகுடன் காணப்படுகின்றனர்.  இதனால் தான் எளிதில் தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றன...