Posts

Showing posts from March, 2020

Sangeetha's Poem on Corona Virus/COVID-19

Poem on Corona Virus/COVID-19 by M. Sangeetha in Tamil, Malayalam and Hindi language Tamil Poem (தமிழ் கவிதை) Version கொரோனா வைரஸ் சொல்லவா நான் ஒரு கதை மானிடா மனிதனில் மாண்புமிகு மற்றொன்றும் இல்லை என்றான் மண்ணில் ஆயதினால் தானோ மண்ணின் கர்ப்பத்திற்கே அவன் விலை பேசினான் எத்தனை நாட்கள் எத்தனை நாட்கள் பூமி உயிர் பிச்சைக் கேட்டது அவனிடம் விழவில்லையே அவன் செவிகளில் படவில்லையே அவன் கண்களில் மனிதனில் மாண்புமிகு ஒன்றுமில்லை என்பதினாலே உயிரை பாலாய் ஊற்றிய தாயை விட உயிர் பாதை காட்டிய தந்தையை விட மானுட நாணயம் மறந்த அவனுக்கு காகித நாணயம் மாண்பாய் பட்டதோ ஆணவம் அணைப்பொட்டி ஒழுகிய மனிதனை கண்டு நின்றதாம் ஒரு சிறு வைரஸ் பொட்டித்து எறிந்தது மனிதனின் சங்கிலியை ஜாதியின்றி மதமின்றி மொழியின்றி பணமின்றி பதவியின்றி உயிர் பிச்சைக் கேட்கிறான் மனிதன் ஒரு நுண் வைரஸின் முன்னில் வைரஸ் கூறிய அறிவுரையோ.... புரிந்து கொள் மானிடா மாபெரும் பிரபஞ்சத்தில் நீ அடிவைத்து நடக்கும் மழலை என்று தனிமனிதனால் நீ ஒரு பூழு என்று பதறாதே... பதறாதே... இனியும் நீ கோர்த்து கொள் பொட்டிய மனிதச் சங்கிலியை இன்னும் சற்று உறைப்பாகவே.... நல்லொரு ...