Posts

Showing posts from March, 2012

Tamil Poem தமிழ் கவிதை | குமரியிலே (Kumariyile)

 முக்கடலும் சங்கமிக்கும் பழம்பெரும் மென் திருக்குமரியிலே ......................... பச்சை கம்பள புல்வெளி என்ன - பெரும் பாறையில் வீற்ற கோபுரமென்ன - நல் பாதை கட்டிய தர்மவீரன் விவேகானந்தரின் பரவச பாறை என்ன! இந்திய பாதமாம் என் குமரியிலே இந்திய தந்தை மண்டபமென்ன - ஓங்கிய சீர் திருவடியாம் பகவதியம்மன் சீறடி தினமொளிரும் மூக்குத்தி என்ன! இருவரியில் மனித மாண்பை உணர்த்திய திருவள்ளுவர் சீர் ரூபமென்ன? இத்தனைக்கும் ஓங்கிய ஓர் பெருமை இந்திய குமரி பெண் கன்னியாகுமரியை அன்றோ சாரும்? இக்கவிதையை தொகுத்தவர் திருமதி சங்கீதா This Tamil poem has been written by my wife Mrs. Sangeetha about 'Kanyakumari'