Tamil Poem தமிழ் கவிதை | ஆகும் உன்னால் ஆகும் (aakum unnal aakum)

ஆகாயம் என்று பரவசபடாதே
ஆகாது என்றும் பரவசபடாதே
ஆகும் உன்னால் ஆகும்
ஆகாயம் வரை ஆட்டிப் படைக்க....

உலகில் ஒரு ஆம்ஸ்ட்ராங் இல்லை
உன்னுள் நீயும் ஒரு ஆம்ஸ்ட்ராங்
உத்தமனாய் ஊக்கத்துடன் விரைந்து வா
உன்னை வரவேற்க வானம் விரைகிறது

உன்னை நீயே சுற்றாதே நண்பா
உலகை நீ சுற்றி வா
உலகில் நீயும் ஒரு மெஹல்லன்
உன்னை போல் ஆயிரம் மெஹல்லனை உருவாக்கு

புதுயுக மானிடனாய் எழுந்து வா
புழுதியில் புழுவாய் அல்ல
புது ஒளி பொழிந்திட வா - உலகை
புதுமையுடன் வாழ வை . . . . .


என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha

Comments

  1. ஊக்கம்மும் உத்வேகமும் அளிக்கும் வரிகள்... மிக அருமை!

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. Quite a tonic for a sinking soul, Sangeetha, your words are inspiring!

    ReplyDelete

Post a Comment