Tamil Poem தமிழ் கவிதை | நானும் ஆகணும் உன்னை போல (naanum aakanum unnai pole)

குக்கூ குக்கூ பாடும் குயிலம்மா
தித்தை தித்தை ஆடும் மயிலம்மா
என் பாஷை சொல்லவந்த கிளிபெண்னம்மா
என் ஆசை அள்ளவந்த சிட்டு கண்ணம்மா

கூண்டுக்குள்ளே நீ இருந்து
கூவுகின்ற காரணத்தை கூறு
எந்தன் குயிலம்மா - நான்
உன்னைப் போல பாடணும் . . . .

மழையை தானே காட்ட வந்தாய்
மயிலே மயிலே ஆடம்மா
நடனம் கற்க ஓடி வந்தேன் - நானும்
உன்னை போல ஆடணும் . . . .

பஞ்சவர்ண பட்டுடுத்த  - என்
அஞ்சு வண்ண கிளியே - ஒரு
பட்டு நான் பாட அதை
கேட்டு நீ பாடு . . . .

பூவுக்குள்ளே தேனை அள்ள
பூவைதானே தேடிவந்த சிட்டுக்கண்ணம்மா
தேனுறிய கற்று கொடு
தேனமிர்தம் நானும் தருவேன்





என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha

Comments

  1. அழகான கவிதை... மிக இனிமையான வரிகள்! ரசித்தேன்

    என் வாழ்த்துக்கள் :)
    Best wishes

    ReplyDelete
  2. Very beautifully written, for some reason I have many times wondered how it is to be like a bird, with wings to fly and look down at the whole world!

    ReplyDelete
  3. Hi, Thank you for visiting my blog.

    ReplyDelete
  4. This is Greek to me. Must be too good.

    ReplyDelete

Post a Comment